Sunday, April 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கைக்குக் கடத்த முயன்ற பெருந்தொகை சிகரெட்டுகள் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்த முயன்ற பெருந்தொகை சிகரெட்டுகள் பறிமுதல்

ராமநாதபுரம் – புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்தத்
திட்டமிடப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று (18) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரகசிய தகவலின் அடிப்படையில்,  அதிகாலை ஒரு மணியளவில் மெரைன்
பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரையில் வாகனமொன்றிலிருந்து மூட்டைகள் இறக்கி பதுக்கிக் கொண்டிருந்த குழுவினரை சுற்றிவளைத்தனர்.

பொலிஸாரை கண்டு சிலர் தப்பியோடிய நிலையில்,  ஒருவரை கைது
செய்ய முடிந்தது.

சம்பவ இடத்தில் இருந்த 35 சாக்கு மூட்டைகள் சோதனை செய்யப்பட்டதில், 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில்இ கைது செய்யப்பட்டவர் புதுமடம் மேற்குத் தெருவைச் சேர்ந்த 38 வயதுடைய முருகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments