Sunday, April 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅதிவேக நெடுஞ்சாலை மீட்புப் பணிகளில் இலங்கை விமானப்படை

அதிவேக நெடுஞ்சாலை மீட்புப் பணிகளில் இலங்கை விமானப்படை

அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் நளின் ஹேவக்கும்புர
தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (17) ஆம் திகதி முதல் இந்த மீட்பு நடவடிக்கைகள்
விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  கட்டுநாயக்க முதல் கொட்டாவ வரை மற்றும் கொட்டாவ முதல்
மத்தள வரையான அதிவேக நெடுஞ்சாலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை
இலங்கை விமானப்படை மேற்கொள்ளும் அதேவேளை,  மீரிகம அதிவேக
நெடுஞ்சாலையின் மீட்புப் பணிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்
மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments