Sunday, April 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவவுனியாவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து

வவுனியாவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து

வவுனியா வடக்கு,  மதியாமடு பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்றைய தினம் குறித்த நபர் தமது அத்தியாவசியத் தேவை ஒன்றின் நிமித்தம் உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்றுள்ளார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து
திடீரெனத் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி,  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments