Sunday, April 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல,  நாலந்த பகுதியில்
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று (26) காலை 9.20 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும்,  இலங்கை
போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 11 பேர் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை
கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில்இ சபாநாயகர் கண்டி வீதி வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது விபத்தைக் கண்ட சபாநாயகர்,  உடனடியாகச் செயற்பட்டு காயமடைந்தவர்களைப் பேருந்துகளில் இருந்து வெளியேற்றவும் , அவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கவும் நேரில் நின்று உதவி வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளார். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments