Sunday, April 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை
யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன்,  அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,
பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்,  தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்
ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவருக்கான அஞ்சலிகளை செலுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments