Tuesday, April 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநிதியமைச்சு வளாகத்தில் சர்வஜன அதிகாரம் போராட்டம்

நிதியமைச்சு வளாகத்தில் சர்வஜன அதிகாரம் போராட்டம்

இலங்கை திறைசேரி வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்திய 2.5 மில்லியன்
அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்ற சம்பவத்திற்கு
எதிர்ப்புத் தெரிவித்து ‘சர்வஜன அதிகாரம்’ இன்று (27) கவனயீர்ப்பு
போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டம் இன்று முற்பகல் நிதி அமைச்சின் வளாகத்திற்கு முன்பாக
நடைபெற்றது.

இதேவேளை,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இச்சம்பவத்திற்கு
எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை இலங்கை மத்திய வங்கிக்கு முன்பாகப்
போராட்டமொன்றில் ஈடுபட்டது.

இந்த விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேலும் பல போராட்டங்கள்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன்,  ‘அரகலயவின் பிரஜைகள்’ அமைப்பினால்
ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு போராட்டமும் இன்று மத்திய வங்கிக்கு
முன்பாக நடைபெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments