Friday, May 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநன்னடத்தை மையத்தில் சிறுவர்கள் மீது தாக்குதல் : ஐவருக்கு விளக்கமறியல்

நன்னடத்தை மையத்தில் சிறுவர்கள் மீது தாக்குதல் : ஐவருக்கு விளக்கமறியல்

வெலிமடை பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை மையமொன்றில் சிறுவர்கள் மீது
தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் மீது அங்கிருந்த ஊழியர்பன் தடிகளால் கொடூரமாகத்
தாக்கியுள்ளனர்.

பின்னர் 119 எனும் அவசர எண்ணுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெலிமடை நீதிவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து,  அவர்களை விளக்கமறியலில் வைக்க
நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments