பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்று ஆளும்
மிதவாத இடதுசாரி தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சுமார் 80
பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலகுவதற்கான கால அட்டவணையை நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கமாகக் கோரியுள்ளனர்.
பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள போதிலும் ஆட்சியைத் தொடர்வதாக தனது அமைச்சரவையில் அவர் கூறியுள்ளார்.
மூன்று அமைச்சர்கள் பிரதமர் ஸடார்மரின் அரசாங்கத்திலிருந்து இராஜினாமா
செய்துள்ளனர்.
அவர்களில் உள்துறை அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸ், அதிகாரப் பகிர்வு, நம்பிக்கை
மற்றும் சமூகங்களுக்கான அமைச்சர் மியாட்டா ஃபான்புல்லே, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைக் கையாள்வதற்கான அமைச்சர் டேவிஸ்-ஜோன்ஸ் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

