Sunday, May 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநுவரெலியாவில் கடும் பனிமூட்டம்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்

நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் இன்று (23) பிற்பகல் நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வீதிகளில் கடும் மூடுபணி நிலவியது குறிப்பாக பனிமூட்டம் நிலவியுள்ளது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் நுவரெலியா பிரதான நகரில் மிதமான மழை இடைக்கிடையே கொட்டி தீர்த்து
வருகின்றது.

இதில் நுவரெலியா நகருக்கு உள் நுழையக்கூடிய பிரதான பிரதான வீதிகள்
அனைத்திலுமே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதனால் எதிரே
வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு இந்த கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதில் நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – ஹட்டன் போன்ற வீதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து கடும் குளிரும் நிலவி வருவதால் பொது மக்கள் மற்றும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடைய இயல்பு வாழ்கை முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கின்றது எனவும் தெரிவிக்கிறனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments