கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இருந்து லொறி ஒன்றின் மூலம் அனுமதி பத்திரமின்றி 22 கால்நடைகளை கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக முகமாலை பகுதியில் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்து நேற்று (23) குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 22 கால்நடைகளையும்
பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

