Tuesday, May 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசல்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு
பலப்படுத்தப்படவுள்ளதுடன்,  போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன்,  இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் நகரப் பகுதிகளில் நடமாடும்
ரோந்து சேவைகள்,  முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்து
நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் தொடர்பில் 119 அல்லது
118 அவசர எண்களுக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம்
கோரப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments