Wednesday, June 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார்.

குறித்த இளைஞர் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது,  அவர்
பயணித்த மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில்
இருந்த மரம் ஒன்றின் மீது மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய
இளைஞரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments