கேரம் போர்ட் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள
குற்றப்பத்திரிகையை நிராகரிக்க கோரி முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவின் மேலதிக விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இதே சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதிவாதி தரப்பு தெரிவித்திருந்தது.
ஒரே குற்றச்சாட்டுக்காக மீண்டும் வழக்குத் தொடர்வது சட்டத்திற்கு முரணானது
என ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
இதனையடுத்து, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிய வழக்கின் மேலதிக
விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

