Friday, June 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதனக்கு போடப்பட்ட செருப்பு மாலையை கழட்டிச்சென்ற அர்ச்சுனா

தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையை கழட்டிச்சென்ற அர்ச்சுனா

யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவித்திருந்த தனது பதாகையை கிழித்து,
தனது காரில் அர்ச்சுனா இராமநாதன் எடுத்து சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை இலக்கு வைத்து அவமதிப்பான வாசகங்கள் கொண்ட 10 அடி உயர பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில்,  சின்னக்கடை பகுதிக்கு அண்மையில் இந்தப்
பதாகை வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பதாகையில் ‘நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராஜபக்ஷ ஈனப் பிறவி’
என எழுதப்பட்டு அவரது புகைப்படத்தின் மீது செருப்புகளால் செய்யப்பட்ட
மாலையும் தொங்கவிடப்பட்டிருந்தது.

நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் இந்தப் பதாகை அமைக்கப்பட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,  குறித்த பதாகையின் புகைப்படங்களும் காணொளிகளும்
சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments