Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்

மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்

டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் 06 மாகாணங்களில்
இன்று (24) முதல் வரும் 26ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு
ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
தெரிவித்துள்ளது.

நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக்
கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  டெங்கு பரவல் அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் வீடுகள்,
பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு
நுளம்பு பெருகும் இடங்களை அகற்றும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார அதிகாரிகள்,  உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய
தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments