Tuesday, July 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசிறைச்சாலை கைதிகளை ஏனைய சிறைசாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை

சிறைச்சாலை கைதிகளை ஏனைய சிறைசாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக,
அங்குள்ள கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும்,  இயல்பு நிலையை
மீட்டெடுப்பதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே
இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நிலைமை உன்னிப்பாகக்
கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,  மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள்
தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில்,  நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும்
ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக
அதிகரித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments