Saturday, July 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகல்லடி பாலத்தில் கழுத்தை அறுத்து உயிமாய்க்க முயன்ற நபரால் பரபரப்பு

கல்லடி பாலத்தில் கழுத்தை அறுத்து உயிமாய்க்க முயன்ற நபரால் பரபரப்பு

மட்டக்களப்புஇ கல்லடி பாலத்தில் தனது ஆடைகளை கழற்றிவிட்டு கழுத்தைத்
தானே அறுத்து உயிரிழக்க முயன்ற 33 வயதுடைய ஒருவரை பொதுமக்களும்
பொலிஸாரும் இணைந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம்
இன்று பகல் (10) இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் தெரிவித்ததாவது,  சம்பவம் நடைபெற்ற வேளையில் குறித்த நபர்
திடீரென வீதிக்கு வந்து தாம் அணிந்திருந்த ஆடைகளை கழற்றிய பின்னர்,
கூர்மையான பொருளால் தனது கழுத்தைத் தானே காயப்படுத்திக்
கொண்டுள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன்,  சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாருடன் இணைந்து
குறித்த நபரை பிடித்து கை மற்றும் கால்களை கட்டி பாதுகாப்பாக
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் 1990 சுவாசரிய ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளில்,  குறித்த நபர் கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா,
தாளையடித் தெருவைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்றும்,  அவர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments