Sunday, July 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசிறைச்சாலை பிரச்சினைகளை தொடர்பில் கலந்துரையாடல்

சிறைச்சாலை பிரச்சினைகளை தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள்இ ஜெயிலர்கள்
உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (17) பிற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும்
இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும்
இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்,  இவ்வாறான சம்பவங்கள்
மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும்இ சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும்
அவர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி
விசேட கவனம் செலுத்தினார்.

ஜனாதிபதி ஒருவருடன் நேரடியாகத் தமது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனச்
சுட்டிக்காட்டிய சிறைச்சாலை அதிகாரிகள், அதற்காக ஜனாதிபதிக்குத்
தமது நன்றியைத் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments