Thursday, August 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசாவகச்சேரி துணைத் தலைவர் பதவி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

சாவகச்சேரி துணைத் தலைவர் பதவி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப்
பதவியில் இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிராக
தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கின் தீர்ப்புஇ ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் நேற்று (05) தீர்ப்பு வழங்கப்படவிருந்த
நிலையில்,  வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை வழங்காமல் எதிர்வரும்
19ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின்
துணைத் தலைவராக இருந்த ஞானப்பிரகாசம் கிஷோர் பதவியிலிருந்து
நீக்கப்பட்டிருந்தார்.

இந்தப் பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு,  அதனை
இரத்துச் செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் வடக்கு மாகாண
மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் மற்றும் பதிலாளிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த
வாதங்களைத் தொடர்ந்து,  வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என
நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.

எனினும்,  நேற்று நடைபெற்ற அமர்வில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால்,
ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கம் சட்டபூர்வமானதா என்பது தொடர்பான
இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments