Monday, August 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநல்லூர் மகோற்சவ கொடியேற்றத்திற்கான புனிதக் கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது

நல்லூர் மகோற்சவ கொடியேற்றத்திற்கான புனிதக் கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ கொடியேற்றத்திற்கான புனிதக் கொடிச்சீலை,  பல தலைமுறைகளாகப்
பேணப்பட்டு வரும் செங்குந்தர் பரம்பரையின் பாரம்பரிய மரபின்படி, கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்திலிருந்து இன்று காலை
10 மணியளவில் எடுத்துவரப்பட்டது.

கல்வியங்காட்டில் உள்ள இல்லத்தில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர்,  கொடிச்சீலை பக்திபூர்வமாக தலையில் சுமந்து சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வேல் முருகன் மடத்திற்கு கொடிச்சீலைக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பாரம்பரிய
முறையில் சிறிய தேரில் கொடிச்சீலை வைத்து,  பக்தர்கள் புடைசூழ
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.

தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வரும் இந்த மரபு, நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்துடன் இணைந்துள்ள பண்பாட்டு,  ஆன்மிக மற்றும் பாரம்பரியத்தின் அழகிய அடையாளமாக திகழ்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments