தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 4 தனியார் பேருந்துகள், 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார
இதனை தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும், மோட்டார் வாகன
பரிசோதகர்களும் இணைந்து தலவாக்கலை பகுதி வழியே பயணித்த சுமார்
40 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியான நிலையில் உள்ளதா என்பது
குறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, பல்வேறு குறைபாடுகளுடன் தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு
வந்த 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு,
அவற்றின் வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டதாக மோட்டார்
வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் பரிசோதனைக்கு
உட்படுத்தும் வரை அவ்வாகனங்களை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

