தெற்கு லெபனானில் உள்ள பல பகுதிகளில், இஸ்ரேலிய இராணுவம் கடுமையான
ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாக லெபனான் தேசிய செய்தி
நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள வாடி அல்-சலூகி அல்-ஹுஜைர் ஆகிய நகரங்கள்
மற்றும் கப்ரிகா . டூலைன் ஹுலாஆகிய பள்ளத்தாக்குப் பகுதிகளில் இவ்வாறு
தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தெற்கே உள்ள அல்-மன்சூரி நகரத்திலும் இஸ்ரேலிய இராணுவம்
குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம்
குறிப்பிட்டுள்ளது.

