Monday, August 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசமிந்த விஜேசிறி எம்.பிக்கு பிணை

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு பிணை

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த
குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை
விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்து,
பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று (24) பரிசீலித்த பின்னரே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது,  சமிந்த விஜேசிறியை 50, 000 ரூபாய் ரொக்கப் பிணையிலும்,  தலா
10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன்,  நீதிமன்றத்தின் அனுமதியின்றி பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாடு
செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments