Tuesday, August 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇழுத்து வெளியே தள்ளப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

இழுத்து வெளியே தள்ளப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்(ஓஎம்பி) ஏற்பாட்டில்,
இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய
அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை
வலியுறுத்தியே போராட்டம் நடைபெற்றது.

இதன்போது,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது உறவுகளை
மீட்டு தருமாறு கதறி அழுததால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments