கடுமையான வறட்சி நிலை காரணமாக யால தேசியப் பூங்காவின் முதலாம்
மற்றும் இரண்டாம் கட்டங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக
வனவிலங்குத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி
வரை யால தேசியப் பூங்காவின் சில பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும்
சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படாது என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

