Friday, August 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிரகரி வாவியில் போனியை தாக்கிய இளைஞர் கைது

கிரகரி வாவியில் போனியை தாக்கிய இளைஞர் கைது

நுவரெலியா கிரகரி வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் போனி ஒன்றை இளைஞர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து,  சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

போனியைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயதுடைய இளைஞரை
நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் நுவரெலியா ஸ்கிராப்
பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை 28ஆம் திகதி நுவரெலியா
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments