Wednesday, September 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகாணாமல் போன மூன்று மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு

காணாமல் போன மூன்று மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு

பலாங்கொடை,  பின்னவல – எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய
3 மாணவிகளும் திருகோணமலைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவிகள்,  நேற்று
(31) தனியார் வகுப்பிற்குச் சென்ற போது காணாமல் போயிருந்த நிலையில்,
அவர்களின் பெற்றோரினால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளின்
அடிப்படையில் இம்மாணவிகள் திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மாணவிகள் எதற்காக அங்கே சென்றார்கள் என்பது குறித்தும்,  இச்சம்பவத்தின்
பின்னணி குறித்தும் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments