Wednesday, September 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபோதைப்பொருளுடன் ஒருவர் கைது

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் பெருந்தொகை போதைப்பொருளுடன்
சந்தேகநபர் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின்
போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளன.

அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணமும் இதன்போது சந்தேகநபரிடம் இருந்து
மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே
இ சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் சேதவத்தை கசுன் என்ற போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியின்
உதவியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 20 கோடி ரூபாவாகும் என
தெரிவிக்கப்படுகின்றது

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments