Saturday, September 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதலைமன்னாரில் வழிதவறிய 8 பேர் கடற்படையினரால் மீட்பு

தலைமன்னாரில் வழிதவறிய 8 பேர் கடற்படையினரால் மீட்பு

தலைமன்னார் கடற்பகுதியில் வழிதவறித் தவித்த 8 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (05) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒரு ஆணும்,  நான்கு பெண்களும்,  2 முதல் 14 வயதுக்குட்பட்ட
மூன்று குழந்தைகளும் அடங்குகின்றனர்.

இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்திருக்கலாம் என
சந்தேகிக்கப்படுவதுடன்,  ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்தியாவின் அனையூர்
மற்றும் ஒக்கூர் அகதி முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் ஊடாக வந்தவர்கள்
என தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்டவர்களுக்கு கடற்படையினர் குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளனர்.

மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக குறித்த குழுவினரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments