Thursday, September 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவீ. ஆனந்தசங்கரியை சந்தித்த அமைச்சர்

வீ. ஆனந்தசங்கரியை சந்தித்த அமைச்சர்

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சிஅலுவலகத்தில்,  அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை
இன்று (08) கடற்றொழில்,  நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது,  வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அமைச்சர்
அன்புடன் விசாரித்ததுடன்,  அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும்
கேட்டறிந்து கொண்டார்.

இச்சந்திப்பின்போது,  நாட்டின் தற்போதைய நிலைமை,  வடக்கு மக்களின்
நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான
முறையில் கலந்துரையாடினர்.

நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட வீ. ஆனந்தசங்கரியை சந்தித்து
அவருடன் கலந்துரையாடியமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments