Wednesday, September 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு: கைதான இருவர்

மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு: கைதான இருவர்

நீர் வழங்கல் வாரியத்திற்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்
இருந்து ரூ.13 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள கேபிள்கள் திருடப்பட்டது
தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைத்த புகாரின் பேரில்
நடத்தப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தனியார்
பாதுகாப்புக் காவலர் ஆவார்,  மற்றொருவர் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 மற்றும் 43 வயதுடைய குறித்த சந்தேக நபர்கள்,  முறையே நீர்வெளி மற்றும்
கொட்டகல பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments