தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதலாவது நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு,
மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பிரதேச சபைத் தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

