பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) கொழும்பு
கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்
இஅவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்
இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக
வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு,
வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டதுடன் விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
நிலையில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு நாமல் எம்.பி அழைத்துச்
செல்லப்பட்டார்.
நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான மற்ற வழக்கறிஞர்களுடன் இணைந்து, ஜனாதிபதி
சட்டத்தரணி அனில் சில்வாவும் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.
இதன்போது, நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான தீர்ப்பு செப்டம்பர் 23 அன்று
அறிவிக்கப்படும் என்றும் நீதிவான் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து,அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது

