Friday, September 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். திருவள்ளுவர் கலாச்சார மன்ற நிர்வாகம் - நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிப்பு

யாழ். திருவள்ளுவர் கலாச்சார மன்ற நிர்வாகம் – நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை ஆவணத்தில் இன்று (18) கையொப்பமிட்டனர்

நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம்
திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையில் அங்கம் வகிக்கும் 9 உறுப்பினர்களும்
கலந்துகொண்டு,  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இலங்கை பாராளுமன்ற அமைச்சரவையின் அனுமதியுடன் நம்பிக்கை நிதியப்
பொறுப்பு சபையிடம் கையளிக்கப்படுகின்றது.

மாகாண சபை ஆட்சி இல்லாத காரணத்தால்இ வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஏ.சி. அரவிந்தராஜ்,  கலாச்சார அமைச்சின் செயலாளர் வர்ணகுல சூரிய பிறின்ஸ் சேனாதீர யாழ் மாநகர முதல்வர்
வி. மதிவதனி இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சிறிமான் சாய் முரளி,
மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்.ஆகியோர் கலந்து கொண்டு
கைச்சாத்திட்டனர்.

சட்டவிரிவுரையாளர் கோசலை மதன்,  யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிறி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

2 வருட காலத்திற்கு நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் அனுமதியுடன்,
எதிர்காலத்தில் பராமரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பான விடயங்கள்
கையாளப்படவுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments