Thursday, September 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை

காலி,  கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய
கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு தொடர்பான நிலை 3 சிவப்பு
எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (24) பிற்பகல் 1 மணி முதல் நாளை (25) பிற்பகல் 1
மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காலி மாவட்டத்தின் நெலுவ,  நியகம,  தவலம,  நாகொடை கண்டி
மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை; நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை
மேற்கு,  நோர்வூட்,  கொத்மலை கிழக்கு மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச
செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments