பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில்
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 36 வயதான சுகாதார உதவியாளர்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் ஏழு பேர்
காயமடைந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் மூவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில்
சேர்க்கப்பட்டிருந்தனர்.
எரிவாயு கசிவைத் தொடர்ந்து எரிவாயு உருளை வெடித்திருக்கலாம் என
சந்தேகிக்கப்படும் நிலையில், விபத்துக்கான காரணம் தொடர்பில்
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

