Sunday, September 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

கடந்த நாட்களில் நடைபெற்ற அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த முன்மொழிவு
கொண்டுவரப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்
ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இதன்படி,  குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வெகுவிரைவில் சபாநாயகரிடம்
கையளிக்கப்படவுள்ளதாக பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் தொடர்பில் 40க்கும் மேற்பட்ட விடயங்கள் இந்த நம்பிக்கையில்லாப்
பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments