Sunday, September 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபெருந்தொகை பணம், கூரிய ஆயுதங்களுடன் சிக்கிய 9 பேர்

பெருந்தொகை பணம், கூரிய ஆயுதங்களுடன் சிக்கிய 9 பேர்

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்
பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் நேற்று
(26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில் கார் ஒன்றிலும்இ இரண்டு மோட்டார்
சைக்கிள்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கும்பல் ஒன்றை
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது,  காரினுள் கூரிய ஆயுதங்களும் 9 இலட்சம் ரூபாய் பணமும்
காணப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,  கார் மற்றும்
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த பெண் ஒருவர் உட்பட 9 பேரையும்
கைது செய்ததுடன்,  அவர்களது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களையும்
பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார். அவர்களை இன்றைய தினம் (27) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில்,  அவர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments