Tuesday, September 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகோட்டாபயவின் சாட்சி பதிவு நிறைவு : நவம்பர் 27க்கு வழக்கு ஒத்திவைப்பு

கோட்டாபயவின் சாட்சி பதிவு நிறைவு : நவம்பர் 27க்கு வழக்கு ஒத்திவைப்பு

சமூக ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்
ஆகியோர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து யாழ்ப்பாண
நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில்,  முன்னாள் ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சாட்சியம்
அளித்தார்.

இன்றைய தினத்திற்கான சாட்சி பதிவு நிறைவடைந்ததோடு,  மேலதிக நடவடிக்கைகள் நவம்பர் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டன.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக சாட்சியங்களை வழங்குவதற்காக,
நவம்பர் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments