யாழ்ப்பாணம் – மன்னார் ஏ35 பிரதான வீதியின் அறுகுவெளிப் பகுதியில்
இன்று (29) காலை விபத்து சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மன்னார் – வட்டக்கண்டல் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய
எமிலியானுஸ் அன்ரனி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் பூநகரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

