2027ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் அதன் முதல் வாசிப்பிற்காக
அக்டோபர் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
பாராளுமன்றத் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் வரவு-செலவுத் திட்ட உரை இடம்பெறும் இரண்டாம் வாசிப்பு, நவம்பர் 12 ஆம் திகதிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதம் நவம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை
நடைபெறுவதுடன் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14 அன்று
மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தத் திகதிகள் பாராளுமன்றத் தொடர்பாடல் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளன

