Wednesday, September 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஎயார்பஸ் வழக்கில் நாமலுக்கு பிணை

எயார்பஸ் வழக்கில் நாமலுக்கு பிணை

எயார்பஸ் விவகாரத்தில் பணச்சலவைக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய,  சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப்
பிணை மற்றும் தலா 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு
சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான்
பசன் அமரசேன உத்தரவிட்டார்

சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,  அது
குறித்து குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும்
உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர,  சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் சந்தேகநபருக்கு
நீதவானால் மேலும் ஒரு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments