Thursday, October 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகோட்டாபயவின் ரிட் மனு நீதிமன்றால் நிராகரிப்பு

கோட்டாபயவின் ரிட் மனு நீதிமன்றால் நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய,  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை,  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனு தொடர்பான விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர் அதன் கட்டளையை
அறிவித்த,  மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய
மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு
நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments