உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டுஇ இன்று (3) நாடு முழுவதும் உள்ள
அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஒக்டோபர் 3ஆம் திகதி சர்வதேச மதுவிலக்கு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மதுபானப் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்இ மதுப் பாவனையை கட்டுப்படுத்துதல்
அல்லது முற்றாகத் தவிர்ப்பதை ஊக்குவிப்பதே இத்தினத்தின் பிரதான
நோக்கமாகும்.

