வடமேல், மத்திய, சபரகமுவ, ஊவா, மேல், தென், வடமத்திய மாகாணங்கள்
மற்றும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல்
திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (03) முற்பகல் 11.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை
நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை
பெய்யக்கூடும் என்பதுடன், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக
பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

