தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக்
கடத்த முயன்ற சுமார் 2 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மண்டபம் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர
காவல் படையினர், கடற்கரையில் கிடந்த 6 மூடைகளைக் கைப்பற்றி
சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 120 கிலோகிராம் கடல்
அட்டைகள் அவற்றில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
உயிருடன் இருந்த கடல் அட்டைகளை மறைவான இடத்தில் பதப்படுத்தி, பின்னர் படகு மூலம் இலங்கைக்குக் கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக
மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

