Monday, October 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை

நல்லூரில் இருந்து அகற்றப்பட்ட திலிபனின் சிலை இன்று (05) பொலிஸாரால்
யாழ். நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.

நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலிபனின் சிலை கடந்த 27 ஆம் திகதி
பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு,  பொலிஸ் நிலையம் கொண்டு
செல்லப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு
பொலிஸார்,  சிலையை நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான அனுமதி
கோரப்பட்ட போதும் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க மறுத்திருந்தது.

குறிப்பாக சிலை வழக்கில் எந்த ஒரு சந்தேக நபர்களின் பெயர்
குறிப்பிடப்பட்டததை அடுத்தே சிலையை பொறுப்பேற்க நீதிமன்றம் மறுத்திருந்தது. மேலும் சிலை தொடர்பான வழக்கை ஜனவரி மாதத்திற்கும்
நீதிமன்றம் ஒத்துவைத்தது.

இந்நிலையில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கடந்த 8 நாட்களாக வைக்கப்பட்டிருந்த
திலிபனின் சிலை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.

பொலிஸ் நிலையத்தில் இருந்து வெள்ளைத் துணியால் மூடிக்கட்டப்பட நிலையில்,
பொலிஸ் வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட சிலை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு
செல்லப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலுக்காக ஒப்படைக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments