Saturday, October 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொழும்பு துறைமுக நகரில் ஒருவர் படுகொலை

கொழும்பு துறைமுக நகரில் ஒருவர் படுகொலை

கொழும்பு துறைமுக நகரில் அமைந்துள்ள தொழிலாளர் விடுதிக்கு அருகில்
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இந்தத் தாக்குதலினால் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என
பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து, கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments