Tuesday, October 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்

யாழில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு,  பிரான்பற்று பகுதியில் நேற்றிரவு இரண்டு
குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு பிரான்பற்று மற்றும் நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடையே
குழு மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இளவாலை
பொலிஸார் மற்றும் விசேட குழுவினர் குறித்த தாக்குதலை மிகுந்த கடினத்தின்
மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தாக்குதலில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் சம்பவத்தின்போது சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments