Wednesday, October 14, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநுவரெலியாவில் ஒரே இலக்கத் தகடுகளைக் கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் மீட்பு

நுவரெலியாவில் ஒரே இலக்கத் தகடுகளைக் கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் மீட்பு

நுவரெலியாவில் ஒரே இலக்கத் தகடுகளைப் பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகளை நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன்,  அவற்றின் உரிமையாளர்கள் எனக் கூறப்படும் இருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும் நுவரெலியாவின் ராகலை மற்றும் சாந்திபுரம் பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சாந்திபுரம் பகுதியில் கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டி வாடகைச் சேவைக்குப்
பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும்,  மற்றைய முச்சக்கர வண்டி ராகலை பகுதியில்
உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில்,  நுவரெலியா மாவட்ட
பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமார மற்றும் நுவரெலியா சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகர பண்டார ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு
அமையஇ இரண்டு முச்சக்கர வண்டிகளினதும் சேஸிஸ் மற்றும் இயந்திர
இலக்கங்களைச் சரிபார்ப்பதற்காக நுவரெலியா மாவட்ட பிரதம மோட்டார் வாகன
பரிசோதகரின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா
பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பி. கொஹோல்தெனியா
தெரிவித்துள்ளார்.

விசாரணைகளில்,  குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும் கடந்த காலங்களில்
பல்வேறு நபர்களுக்குச் சொந்தமாக இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த வாகனங்கள் கடந்த காலங்களில் ஏதேனும் சட்டவிரோதச் செயல்களுக்கு
பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் நுவரெலியா பொலிஸார்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments